தேசிய அளவிலான போட்டியில் பங்குபெறும் அரசுப்பள்ளி மாணவர்கள்

0 1,261
Stalin trichy visit

பீமநகர் – மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் R. பிரியதர்ஷன் மற்றும் R. தேவதர்ஷன் ஆகிய இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக திருச்சி வடுகபட்டி ஹாக்கர்ஸ் கிளப்பில் தலைமைப் பயிற்சியாளர் திரு. பசூல் கரிம் அவர்களிடம் பயிற்சி பெற்று இந்த ஆண்டு நடைபெற்ற 32 – வது ஆண்டு மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் திருச்சி அணிக்காக 11 வயதிற்குட்பட்ட போட்டியில் இரண்டு பிரிவுகளிலும் முதல் பரிசு பெற்றனர்.

மேலும் பெங்களூருவில் டிசம்பர் 11 முதல் 22 வரை நடைபெறும் 60 – ஆம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிக்கு மாணவர்கள் இருவரும் தேர்வாகியுள்ளனர்.

தலைமையாசிரியர் & பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழு, மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மாணவச் செல்வங்களுக்கு பாராட்டுக்களையும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Leave A Reply

Your email address will not be published.