நெகிழிப்பை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

0 243
Stalin trichy visit

கஞ்சநாயக்கன் பட்டி அரசு உயர் நிலை பள்ளி மாணவ மாணவியர் நெகிழிப்பை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தற்பொழுது திருச்சி மாவட்டத்தின் பசுமை பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் நெகிழிப்பை ஒழிப்பு குறித்தும் மரங்களை வெட்டாதே, மரங்களை வளர்க்க வேண்டும் என வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கஞ்சநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து எல்லைக்காட்டுப்பட்டி வரையிலும் அதனைத் தொடர்ந்து சிங்கிலி பட்டி போன்ற முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று அரசு பள்ளியில் பேரணியை நிறைவு செய்தனர். பேரணியை ஒன்றிய கவுன்சிலர் சின்னக்கருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் கலையரசன்,மற்றும் பள்ளி ஆசிரியர்கள் . பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.