மணப்பாறையில் புற்றுநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
திருச்சி, நவ.7 மணப்பாறையில் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பேரணி.
பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு.
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளி சார்பில் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வாகைக்குளம் சாலையில் பள்ளி வளாகத்தில் இருந்து மாணவர்கள் கையில் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நம்பிக்கை மட்டுமே நமது ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு பேரணியாக புறப்பட்டனர். பள்ளி முதல்வர் கொடியசைத்து துவக்கி வைக்க பேரணியானது விராலிமலைச் சாலை, காமராஜர் சிலை, கோவில்பட்டி சாலை, மாரியம்மன் கோவில், வாகைக்குளம் சாலை வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. பேரணியின் முடிவில் மாணவர்கள் புற்றுநோய்க்கெதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பேரணியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.