சாலையை கடக்க முயன்ற சலூன் கடைக்காரர் உயிரிழப்பு : காவல்துறையினர் விசாரணை

0 110
Stalin trichy visit

திருச்சி நவ.7 மணப்பாறை அருகே கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற சலூன் கடைக்காரர் உயிரிழப்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புதுவாடி மருத்துவர் காலனியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 52). சலூன் கடை நடத்தி வரும் இவர் தனது கடைக்குச் செல்வதற்காக திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நடந்து சென்றபோது சென்னையில் இருந்து வத்தலகுண்டு சென்ற கார் கருப்பையா மீது மோதியதில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வையம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.