பிராட்டியூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.2.3 லட்சம் பணம் பறிமுதல்

0 330
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 30  வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ 2.3 லட்சம்  பணம் பறிமுதல்

திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொது மக்களிடம் அவர்களது பணிகளை செய்து கொடுப்பதற்கு நேரடியாகவும், புரோக்கர்கள் மூலமும் லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின்பேரில் திருச்சி மாவட்ட லஞ்சஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில், 4 ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வுக்குழுவினர் அடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அரசு வாகனத்தில், அலுவலகத்தில் நான்கு இடங்களில் மற்றும் இரண்டு புரோக்கர்களிடம் இருந்து கட்டுகட்டாக கணக்கில் வராத 2.3லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட தொகையை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பணியில் இருந்த ஆர்டிஓ நடராஜன் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.