புதிதாக தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

0 642
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல் தலைமுறை தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்கிட புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டமானது தமிழக அரசால் மாவட்ட தொழில் மையம் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதி பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பிலிருந்து 12-ம் வகுப்பு ஆகும் எனவே 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தொழில் முனைவோரும் இத்திட்டத்தின் கீழ் சுயமாகத் தொழில் தொடங்கிட விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் திட்ட மதிப்பீடானது குறைந்த பட்சம் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை இருக்கலாம். நிலையான மூலதனத்தில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.75 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ் பட்டியல் இனம்-பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவை சேர்ந்த தொழில் முனைவோருக்கு 10 சதவீதம் கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துப் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.