திருச்சி ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு மின்துறையில் பணி நியமன ஆணை!

0 617
Stalin trichy visit

ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவு என்பதும் ஒலிம்பிக்கில் எப்படியாவது தங்கம் வெல்ல வேண்டும் என்பதுதான். அதற்காக அவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. எவ்வளவு தடைகளைத் தாண்டி தமிழகத்தில் இருந்து அதுவும் திருச்சியிலிருந்து 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் தேர்வாகி உள்ளார் என்றால் அது திருச்சிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை தான்!

அந்த வகையில் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக தூக்கிய ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட திருச்சி பெண் வீராங்கனைகள் தனலட்சுமி மற்றும் சுபா ஆகியோருக்கு சொன்னது போலவே மின்வாரியத் துறையில் விளையாட்டு அலுவலர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியில் வசித்து வருகின்றனர். 22 வயதான இவருக்கு இரண்டு தங்கைகள் இருக்கின்றனர். இளம் வயதிலேயே தந்தையை இழந்த தனலட்சுமி வறுமையின் காரணமாக கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். மூன்று பெண் பிள்ளைகளையும் அவருடைய அம்மா மிகுந்த சிரமப்பட்டு வளர்த்து வந்துள்ளார். அவருக்கு தேவையான அத்தனை உதவிகளையும் பயிற்சிகளையும் விளையாட்டு துறையில் சாதிக்க இவ்வளவு தூரம் கொண்டு சென்றவர் தான் பயிற்சியாளர் மணிகண்டன் ஆறுமுகம்!

திருவெறும்பூர் பகவதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் பூங்கொடி தம்பதியினர். இவர்களுடைய மகள் சுபா. தந்தை கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாத்தா பாட்டி வளர்ப்பில் வளர்ந்த சுபா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் இரண்டு வீராங்கனைகளுக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணி நியமன ஆணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.