திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி ஒன்றியத்தில் 10-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கையாக நிறைவில் 521 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவைச் சேர்ந்த சபியுன் நிஷா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.

அருகில் மாவட்ட பொருளாளர் மற்றும் மருங்காபுரி ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் நிர்வாகிகள் அனைவரும் உள்ளனர்.
அதேபோன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 6வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட செல்லமணி 206வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo