திருச்சி மாநகராட்சி 38-வது வார்டில் நடைபெற்ற பகுதி சபைக் கூட்டம்
திருச்சி, அக்.29 தமிழ்நாடு அரசால் மாநகராட்சி மற்றும் நகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு வார்டு சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் கவுன்சிலர்கள் தலைமையில் இன்று (அக்.29) சிறப்பு வார்டு சபைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக 38வது வார்டுக்கு உட்பட்டஅண்ணா நகர் பள்ளிவாசலில் பகுதி சபாகூட்டம் மாமன்ற உறுப்பினர் மு தாஜுதீன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் நரசிங்கமூர்த்தி முன்னிலையில்நடைபெற்றது.அதில் எஸ் டி பி ஐ கட்சியின் கல்வியாளர் அணி சார்பில் மாவட்ட தலைவர் எஸ் எஸ் ரஹமத்துல்லா தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் திருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்து ஐநூறு மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . இவர்களுக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாத காரணத்தால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இருக்கக்கூடிய கழிப்பறைகளும் பழுதடைந்து இருப்பதால் மாணவ மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. எனவே இரண்டு பள்ளிகளுக்கும் புதிய கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர ஆவன செய்ய வேண்டுமாய் மாணவ மாணவிகளின் சார்பாகவும் எஸ்டிபிஐ கட்சியின் கல்வியாளர் அணி சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிகழ்வில் திருவரம்பூர் தொகுதி செயலாளர் முஜிபுர் ரஹ்மான், அமைப்பு பொதுச்செயலாளர் இஸ்மாயில் ராஜா, கிளைத் தலைவர் பஷீர் நூரி மற்றும் ஷாகுல் ஹமீது, பீர் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.