முத்தமிழ்த் தேர் திருச்சி வருகை
திருச்சி, நவ. 20 முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பொதுமக்கள் பார்வைக்கு காட்டுப்படுத்தும் வகையில் முத்தமிழ்த்தேர் நேற்று திருச்சி மாவட்டத்திற்கு வருகைதந்ததையொட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முத்தமிழ்த்தேரை ரவேற்று தேரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மண்டல குழுத் தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள், பொது மக்கள் கலந்து கொண்டு முத்தமிழ்த்தேரை பார்வையிட்டனர்.