திருச்சியில் DREAM டயாலிசிஸ் மையம் திறப்பு

0 54
Stalin trichy visit

திருச்சி, செப்.25  திருச்சியில் DREAM டயாலிசிஸ் மையம் திறப்பு -டெல்டா மாவட்ட மக்களுக்கு குறைந்த செலவில் நவீன சிகிச்சை

டெல்டா மாவட்டங்களில் உள்ள நோயாளிகளுக்கு குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுநீரக நோயாளிகளுக்குத் தரமான மற்றும் குறைந்த செலவில் டயாலிசிஸ் சிகிச்சை கிடைப்பதை மேம்படுத்தும் நோக்கில், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 சார்பில் ‘DREAM டயாலிசிஸ் மையம்’ திருச்சி தில்லைநகரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த மையம் தி ரோட்டரி ஃபவுண்டேஷன் திட்டத்தின் கீழ், கரூர் Asian Fabricx Private Limited நிறுவனத்தின் Asian Foundation நிதியுதவியுடனும், Rotary Club of Karur Texcity, RI District 3000 ஆதரவுடனும், The Rotary Foundation ஒத்துழைப்புடனும் நிறுவப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் 6 நவீன டயாலிசிஸ் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் தொடர்ச்சியான டயாலிசிஸ் சிகிச்சையால் ஏற்படும் பொருளாதார மற்றும் பயணச் சுமையைக் குறைக்க முடியும்.

இந்த மையத்தில் டயாலிசிஸ் சிகிச்சை, மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் மைவிழிச் செல்வி அவர்களின் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் சிறுநீரக சிகிச்சை நிபுணத்துவ ஆதரவுடன் வழங்கப்படும். மேலும், Urology துறையை வலுப்படுத்தும் வகையில், Urologist டாக்டர் சந்தோஷ் குமார் அவர்களின் பங்களிப்பும் இதில் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த மையத்தை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட Asian Fabricx Pvt. Ltd. தலைவர் திரு. N. R. வெங்கடாசலம் திறந்து வைத்தார். விழாவில் RI District 3000 மாவட்ட ஆளுநர் Rtn. J. கார்த்திக் (2025-26) மற்றும் DRFC Rtn. Rvn கண்ணன் (2025-26) ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் & மருத்துவமனையின் தலைவர் டாக்டர் M. சிவசுப்ரமணியம் தலைமை தாங்கினார். ஜீயபுரம் ராஜம் நர்சிங் ஹோம் டாக்டர் S. S. ராஜா உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய  N. R. வெங்கடாசலம், “டெல்டா மாவட்டங்களில் குறைந்த செலவில் டயாலிசிஸ் சிகிச்சை கிடைப்பது முக்கியமான மருத்துவத் தேவையாக உள்ளது. ரோட்டரி மற்றும் Asian Foundation இணைந்து மேற்கொள்ளும் இந்த முயற்சி சிறுநீரக நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பயனளிக்கும் என்றார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் M. சிவசுப்ரமணியம் பேசுகையில், “ரோட்டரியின் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த டயாலிசிஸ் மையம் அத்தியாவசிய சிறுநீரக சிகிச்சையை பொதுமக்களுக்கு மேலும் எளிதாகக் கொண்டு செல்லும் ஒரு முக்கியமான முயற்சியாகும். 6 டயாலிசிஸ் இயந்திரங்களும், சிறுநீரகவியல் மற்றும் Urology துறைகளின் சிறப்பு மருத்துவ ஆதரவும் இணைந்து, நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையைக் குறைந்த செலவில் வழங்க உதவும் எனக் குறிப்பிட்டார்.

இந்த முயற்சி Delta Cancer Foundation அமைப்பின் “Cancer-Free Cauvery Delta” என்ற நோக்கத்துடனும் இணைந்து செயல்படும் சமூகநல அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது. புற்றுநோய் சிகிச்சையைத் தாண்டி, தொடர்ந்து டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளிகளுக்கான அத்தியாவசிய மருத்துவ சேவையை மேம்படுத்துவதன் மூலம், டெல்டா பகுதி நோயாளிகள் மற்றும் குடும்பங்களின் நலனை மேம்படுத்துவதை இதன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.