எ.புதூர் மாநகராட்சி பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள்
திருச்சி, ஆக.13 எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கியது.
பசுமையும் பாரம்பரியமும்” என்கின்ற தலைப்பில் இன்று முதல் நாள் மாறுவேட போட்டிகள் நடைபெற்றது. முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மாறுவேட போட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
குறிப்பாக பசுமையை பாதுகாக்க வேண்டும், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், மரங்களை பாதுகாக்க வேண்டும், இயற்கையான உணவுகளை பாதுகாத்து நம்முடைய பாரம்பரியத்தையும், சமூகத்தின் ஒழுக்கங்கள், சமூகத்தின் மேன்மை, தனிமனித உடல் நலம் ஆரோக்கியத்தை மாணவர்கள் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் மாறுவேட போட்டியில் சிறப்பாக பங்கெடுத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் மற்றும் தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கி. சதீஷ்குமார் ஆகியோர் நடுவராக பங்கேற்று நிகழ்வை நெறிப்படுத்தினார்கள்.
பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.