வழக்குரைஞர்களுக்கு சமரச சட்டம் 2023 குறித்து பயிற்சி

0 247
Stalin trichy visit

திருச்சி, ஆக.13  உச்ச நீதிமன்ற சுற்று அறிக்கையின் படி தேசிய சமரச மையம் நிகழ்வு நாடு முழுவதும் 1/ 7/ 2025 முதல் 30 /9/ 2025 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட சமரச மையம் ஏற்பாட்டில் நேற்று 11 /8 /2025 அன்று புதிய நீதிமன்ற வளாகம் நான்காவது மாடியில் மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர்  தலைமையில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் சமரச மைய தொடர்பான புதிதாக ஏற்பட்டுள்ள சமரச சட்டம் 2023 பற்றி பயிற்சி வகுப்பு மற்றும் கலந்துரையாடல்  நீதிபதி C. கார்த்திகா- வால் பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டது.

மேலும்  மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் உரையாடிய போது வழக்கறிஞர்கள் சமரச மையத்திற்கு பரிந்துரைத்து விரைவாக வழக்காடிகளுக்கு வழக்கு முடிப்பதற்கு உதவ வேண்டும் என்று கூறினார்.  உடன் நீதிபதிகள் B. சரவணன்,  நீதிபதி திரு A. பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.  நிகழ்ச்சியில் சமரச மையம் தொடர்பான துண்டறிக்கையை மாண்புமிகு நீதிபதிகள் சங்க நிர்வாகிகளிடம் வழங்கினர்.

இந்நிகழ்வில் திருச்சி வழக்கறிஞர் சங்கத் தலைவர் S. P. கணேசன், செயலாளர் C. முத்துமாரி துணைத் தலைவர் வடிவேல்சாமி இணைச் செயலாளர் விக்னேஷ் குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் P. சுரேஷ், செயலாளர் வெங்கட் மற்றும் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.