திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சி உறையூர் பகுதி திமுக சார்பாக கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் உறையூர் பகுதி செயலாளர் கண்ணன் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். 54வது வட்டச்செயலாளர் புத்தூர் ராபின்சன், துணைச் செயலாளர் கார்த்திக், புயல் கிருஷ்ணன், பிரதிநிதிகள் ராஜ்குமார், செந்தில், அருள்ராஜ், அயூப் கான் குமார், அழகு, குமரவேல், பாய் கடை தெரு குமார், கதிர், அவைத்தலைவர் ஆண்ட்ரூஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA