துறையூரில் அருண்நேரு பிரச்சாரத்தை துவக்கினார்

0 221
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 25  பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே என் நேரு சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன் ஸ்டாலின் குமார் ஆகியோர் பரப்புரையை தொடங்கினர்.

முன்னதாக புத்தனாபட்டி கிராமத்தில் அமைச்சர் கே என் நேரு தலைமையில் திமுக வேட்பாளர் அருண் நேரு பிரச்சாரத்தை தொடங்கினார்.பிரச்சாரத்தில் துறையூர் தொகுதியில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணவும் வேலைவாய்ப்பு அரசு கல்லூரி ஆகியவற்றை அமைத்திட தான் முயற்சி மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்து பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார் அப்போது திரளான தொண்டர்கள் வேட்பாளருடன் தீவிர அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

Leave A Reply

Your email address will not be published.