திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1.19 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி, ஜூன் 25 திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 666 கிராம் தங்கம் பறிமுதல்
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர் (Electric circular saw ) மின்சார ரம்பத்தில் (அறுக்கும் இயந்திரம்) மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் ஒரு கோடியே 19 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 666 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பையனிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்