திருச்சி, ஜுன் 19 திருச்சி -திண்டுக்கல் சாலையிலுள்ள கருமண்டபம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியையொட்டி அதன் ஏ.டி.எம். மய்யமும் செயல்பட்டு வருகிறது. வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம். மய்யம் என்பதால் பகல்நேரத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த மையத்தில் பணம் எடுத்து செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு மேல் இந்த ஏ.டி.எம். மய்யத்தில் மர்ம நபர்கள் சிலர் உள்ளே புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வரும் டிரே வழியாக கடப்பாரையை விட்டு குத்தி பெயர்த்துள்ளனர். நீண்டநேரம் முயற்சித்தும் அவர்களால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதற்கிடையே இரவு ரோந்து காவல்துறையினர் ஏ.டி.எம். மய்யம் அமைந்து இருந்த பகுதி வழியாக வந்தனர்.
காவல்துறையினர் வருவதை நோட்டமிட்ட அந்த மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர். ரோந்து காவல்துறையினர் ஏ.டி.எம். மய்யத்தில் பார்த்தபோது, அங்கு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.
ரோந்து காவல்துறையினர் உடனடியாக இதுகுறித்து செசன்ஸ் நீதிமன்ற காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏ.டி.எம். மய்யத்தில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து, கொள்ளையடிக்க முயற்சித்தது யார்? என தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.