டயர் தொழிற்சாலை ஊழியரை வெட்டி கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது

0 427
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பணமங்கலம் பகுதியில் பெரம்பலூர் மாவட்டத்தில் டயர் தொழிற்சாலை ஊழியரை வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இரண்டு வாலிபர்களை கொள்ளிடம் போலீசாரிடம் சிக்கினர்.

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தைச் சேர்ந்த பழனியின் மகன் 35 வயதான கமலஹாசன்.மனைவியுடன் சிறுவாச்சூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விஜய கோபலமுரத்தில் உள்ள எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மதிய சிப்ட் வேலைக்கு சென்றவர் இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வருவதாக மனைவிடம் தெரிவித்து சென்றுள்ளார் .நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வர்றதால் தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் பெரம்பலூர் அருகே புது நடுவலூர் ஆதிதிராவிடர் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு நேற்று அதிகாலை காமராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பலூர் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் சமயபுரம் அருகே பணமங்கலம் பகுதியில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர்.அப்போது அங்கு ரோந்துப் பணியில் இருந்த கொள்ளிடம் போலீசார் வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பெரம்பலூர் அருகே புது நடுவலூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான கார்த்திக் மற்றும் 24 வயதான மனோஜ் என தெரியவந்தது. மேலும் டயர் தொழிற்சாலை ஊழியர் காமராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரியவந்தது.இதையடுத்து இருவரையும் பெரம்பலூர் மாவட்ட போலீசாரிடம் கொள்ளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.