அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு

0 431
Stalin trichy visit

அரசு பள்ளிப் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இன்டராக்ட் தொடக்க விழா

இன்று டவுன் ஹால் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் இன்டராக்ட் தொடக்க விழா மற்றும் பள்ளிப் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தி மற்றும் நட்சத்திரம் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் நடத்தப்பட்டது. இதில் 250 பள்ளி மாணவிகளும், 30 பள்ளி ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. தேவி நிர்மலா வரவேற்புரை ஆற்றினார். மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை பிரபல பெண்கள் நல மருத்துவர் Dr. ரமணி தேவி வழங்கினார். மாணவிகள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர்.


இன்டராக்ட் கிளப் துவக்க விழாவும் இனிதே நடந்தது. இன்டராக்ட் கிளப் மூலம் மாணவிகள் என்ன செய்யலாம் என ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 3000 துணை ஆளுநர் Rtn. ஹேமலதா சிறப்புரை ஆற்றினார். ரோட்டரி சங்க தலைவி Rtn. பியாட்ரிஸ் வனஜா வாழ்த்துரை வழங்கினார். பொருளாளர் Rtn. ஷோஷன், Rtn. வளர்மதி, Rtn. அருணா கலந்து கொண்டனர். நட்சத்திரம் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் 2000 நாப்கின்கள் பள்ளிக்கு இலவசமாக வழங்கப்பட்டது. நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை பள்ளி செய்திருந்தது

Leave A Reply

Your email address will not be published.