திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 21.50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது.
இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங் கையை சேர்ந்த நசீர் அலி(வயது 38) என்பவர் சங்கிலி வடிவிலும் மற்றும் மடிக்கணினியில் மறைத்தும் ரூ.21 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பி லான 355 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் பறி முதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.