குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

0 366
Stalin trichy visit

திருச்சி உறையூர் சவேரியார்கோவில்
தெருவில் ஜூன் 3 மகளிர் சுயஉதவிக்குழு தினம் முன்னிட்டு மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 03.06.23 நடைப்பெற்றது.
மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகள் என்போர் தாயின் கருவறை முதல் பதினேட்டு வயது பூர்த்தியாகும்வரை உள்ளவர்கள், அவர்களுக்கான நான்கு வகையான வாழ்வதற்கான, வளர்வதற்கான, பாதுகாப்பிற்கான பங்கேற்பதற்கான உரிமைகள் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடுப்புச் சட்டம், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் இணைய வழி குற்றங்கள் போதைப்பொருள் தடுப்பு மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் இடைநின்ற குழந்தைகள் பள்ளியில் சேர்க்காத குழந்தைகள் ஆகியோரை பள்ளியில் சேர்ப்பது மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 பெண்களுக்கான உதவி எண் 181குறித்து விழிப்புணர்வு வழங்கினார். கோரல் மியூச்சுவல் பெனிபிட் நிறுவனம் நிர்வாக அலுவலர் கவிதா வரவேற்றார். கள அலுவலர் விசலாட்சி நன்றி கூறினார். 50க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கலந்துக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.