பள்ளி மாணவிகளுக்கு அகல்விளக்கு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி, ஆக.25 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அகல்விளக்கு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு கோட்டக் கலால் அலுவலர் அருள்ஜோதி சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுமையா பானு ஆகியோர் மாணவிகள் இணைய வழி பயன்பாட்டின் விளைவாக ஏற்படும் அச்சுறுத்தல்கள் பாதிப்புகள் மற்றும் இதிலிருந்து விடுபட மாணவர்கள் கைபேசியை எவ்வாறு பயன்படுத்துவது கையாள்வது குறித்தும் குழந்தை திருமணம், பாலியல் வன்முறை, குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 சைபர் கிரைம் காவல் நிலைய உதவி எண் 1930 பள்ளி மாணவர்களுக்கான தொலைபேசி எண் 14417 மாணவர் மனசு பெட்டி முக்கியத்துவம் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2800 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.