முசிறியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

0 150
Stalin trichy visit

திருச்சி, பிப்.27 முசிறி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தம் விழிப்புணர்வு பேரணியை சார் ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..

பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு..

திருச்சி மாவட்டம், முசிறி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முசிறி வருவாய் துறையினர் சார்பாக 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணியை முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்,
பேரணியில் மாணவிகள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பினர், பேரணியானது அரசுப்பள்ளியில் தொடங்கி முசிறி புதிய பேருந்து நிலையம் வழியாக முக்கிய வீதிகள் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது, பேரணியில் வட்டாட்சியர் லோகநாதன் மற்றும் வருவாய்த் துறையினர், ஆசிரியர்கள், 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர், முசிறி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.