முசிறியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்சி, பிப்.27 முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்..
திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் முழுவதும் வேலைத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிட வலியுறுத்தியும், புதிய வி பி ஜி ராம்ஜி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மகாத்மா காந்தி வேலை ஊரக உறுதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசும், மாநில அரசும் வழங்கும் நிதி ஒதுக்கீட்டை 100% வழங்க வேண்டும் என வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்,
கோரிக்கைகள் குறித்து அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மூன்று சக்கர வாகனங்களில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர், பத்து பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.