பள்ளிக் கல்வித்துறை பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம்

0 317
Stalin trichy visit

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு இயக்ககங்களின் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம்  கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12’ஆம் வகுப்புகளுக்கான வினாவங்கி புத்தகங்களை மாண்புமிகு அமைச்சர்  வெளியிட்டார்.
மேலும் பொதுமக்கள், மாணவர்கள் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த சான்றிதழ்களைப் பெறுவதற்கான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையவழிச் சேவைகளையும் தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன்., பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முனைவர் க.அறிவொளி, மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன், பொது நூலகத் துறை இயக்குநர் இளம்பகவத், தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.