உலக கழிவறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை பேரணி

0 3

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் உள்ள ராஜா உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் விபிடி ஷோபனா தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி அன்று உலக கழிவறை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள ராஜா உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் உலக கழிவறை திறத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். அப்போது மக்கும் குப்பைகளை என் வீட்டிலேயே உரம் தயாரித்து வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்துவேன். குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பேன்.பொது இடங்களில் குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்தவோ தீமூட்டவோ செய்ய மாட்டேன்.தீங்கு விளைவிக்கக் கூடிய குப்பைகளை பாதுகாப்பான முறையில் கையாளுவேன் உள்ளிட்ட உறுதிமொழிகளை பள்றி மாணவ,மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.

இந்தப் பேரணியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி செயலர், ஆசிரியர்கள் சமூக ஆர்வலரும்,வழக்கறிஞருமான கணேஷ் என்கின்ற விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!