காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் நெகிழி பயன்பாட்டிற்கு தடை – ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

0 257
Stalin trichy visit

திருச்சி, நவ. 18 திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் பயன்பாட்டில் இருந்து நீக்குவது, நிலவையில் உள்ள வரியினங்களை வசூல் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆலோசனையின் பேரில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி கூட்ட மன்றத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமை வகித்தார். அலுவலக பணியாளர்கள் அனைவரும் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக்பைகளினால் ஏற்படும் தீமையை பொதுமக்கள் உணர செய்வது, காட்டுப்புத்தூர் பேரூராட்சியை முற்றிலும் நெகிழி இல்லா பேரூராட்சியாக அறிவித்ததை தொடர்ந்து 90 நாட்களுக்குள் பேரூராட்சி முழுவதும் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தடை செய்வது, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், தனிநபர் கழிப்பிடம், கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வார சந்தை மேம்பாட்டு பணி, எரிவாயு தகன மேடை அமைத்தல் பணி, கருங்காட்டு குட்டை மேம்பாட்டு பணி, சாலை விரிவாக்க பணிகள், சொத்து வரி தொழில் வரி, உள்ளிட்ட வரியினங்களை விரைந்து வசூல் செய்து முடிப்பது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பேரூராட்சியின் அனைத்து பணியாளர்களும் சிறப்பு முகாம் வாயிலாக பணியாற்றி வரியினங்களை முழுவதுமாக வசூல் செய்யும் பணியில் ஈடுபடுவது, குடிநீர் கட்டணம், தொழில்வரி, குத்தகை கட்டனங்கள் ஆகியவற்றை நிலைவை இன்றி வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் இளநிலை உதவியாளர்கள் பாரதியார், சித்ரா, ராஜேந்திரன், வரி தண்டலர்கள் சர்மிளா, சதாசிவம், பதிவறை எழுத்தர் மாணிக்கவல்லி, துப்புரவு மேற்பார்வையாளர் (பொ) கண்ணன், கணினி இயக்குனர் மதுசூதனன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.