முசிறியில் நவீன இயந்திரம் மூலம் சாலையோரம் வளர்ந்திருந்த புல் செடிகள் அகற்றம்

0 232
Stalin trichy visit

திருச்சி, நவ.18 திருச்சி மாவட்டம், முசிறி பைபாஸ் ரோட்டில் நெடுஞ்சாலை துறையினர் நவீன இயந்திரம் கொண்டு சாலை ஓரத்தில் உள்ள புல் மற்றும் முள் செடிகளை அகற்றினர். முசிறியில் நெடுஞ்சாலையின் இரு பக்கமும் வளர்ந்துள்ள புல் மற்றும் சிறு முள் செடிகளை அகற்றுவதில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பணியாளர்கள் மண்வெட்டி, அரிவாள் மற்றும் கை எந்திரத்திரம், மூலம் அகற்றுவதால் பணிகளை விரைந்து முடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதையடுத்து நவீன இயந்திரம் கொண்டு முசிறி பைபாஸ் ரோட்டில் உள்ள சாலையின் இரு பக்கத்தில் வளர்ந்திருந்த முள்செடிகள், முட்கள் ஆகியவை அகற்றப்பட்டது. சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இப்பணியினை உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர். அப்போது உதவி பொறியாளர்கள் உமேஷ் மற்றும் சுரேஷ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.