வங்கிக்கு பூட்டு போடும் போராட்டம்: விவசாயிகள் கைது
திருச்சியில் விவசாயிகள் ஐஓபி வங்கியை போட்டு பூட்டு போராட்டம் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யக்கண்ணு தலைமையில் ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகளின் கடன்களை தள்ளுபடி செய்து விடுகின்றனர்.
ரூ.10 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்களை மோடி பென்ஷன் பணம் மாதம் ரூ.500, ஊனமுற்றோர் உதவி தொகை, விதவை உதவி தொகை,100 நாள் பணம், வயது முதிர்ந்தோர் உதவி தொகை வங்கி விவசாய கடனுக்கு பிடிக்ககூடாது என்பதை வலியுறுத்தி வங்கி மேனேஜரை கைது செய் அல்லது வங்கியை பூட்டும் போராட்டம் நடத்தினர்.
கண்டோன்மென்ட்
IOB ரீஜினல் வங்கி அலுவலகம் முன்பு விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் வங்கியின் பிரதான வாயில் மூடப்பட்டுள்ளது.
காவல்துறையுடன் விவசாயிகள் தள்ளு முள்ளு ஏற்பட்தால் வங்கியை இழுத்து மூட உள்ள ஓடினர் விவசாயிகள். காவல்துறையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தி
வங்கியை பூட்டு போட முயற்சித்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்