திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்
திருச்சி, ஏப். 29 திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மதுரை ரோடு பகுதியில் அப்துல் ரஹீம் என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் அந்த கடையில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி பாண்டி தலைமையில் அதிகாரிகள் திடீரென்று சோதனை செய்தனர். அப்பொழுது அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 14 கிலோ பொருட்கள்இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு சுமார் 33 ஆயிரம் ஆகும்.
இது தொடர்பாக மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி பாண்டி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் அப்துல் ரஹீம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.