சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
திருச்சி, ஏப். 29 திருச்சி பொன்மலைப்பட்டி, முல்லை நகர் 7வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் குமார் இவரது மகன் எபினேசர் (வயது 28) இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி திண்டுக்கல் சாலையில் கருமண்டாபுரம் தேசிய கல்லூரி அருகில் வேகமாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் எபினேசர் தலையில் பலத்த காயமடைந்து மயக்கம் அடைந்தார். இந்த விபத்தை நேரில் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எபினேசரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த எபினேசர் திடீரென்று சிகிச்சை பலன்களை பரிதாபமாக இருந்தார். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்