கூடைப்பந்து போட்டி : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 315
Stalin trichy visit

கூடைப்பந்து போட்டி : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி, டிச. 4 திருச்சியில் நடைபெற்றும் வரும் குடியரசு தினவிழா விளையாட்டு போட்டிகளில் நேற்று கூடைப்பந்து போட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். 2023- 24 ஆம் கல்வி ஆண்டிற்கான 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 64வது குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் நடைபெற்ற வருகின்றனர். இந்த போட்டிகள் வரும் 7 ஆம் தேதி வரை நடக்கிறது. ஆடவர், மகளிர் என தனித்தனியாக போட்டிகள் நடந்து வருகிறது. திருச்சியில் 8 இடங்களில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. கால்பந்து, கூடைபந்து, மேசை பந்து, கபடி, எரிப்பந்து, கையுந்து பந்து, இறகுப் பந்து, பூப்பந்து, வளைக்கோல் பந்து, கோகோ போன்ற விளையாட்டுப் போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக டிச. 2 முதல் இன்று வரை நடைபெறும் கூடைப்பந்து போட்டி ஜெ.ஜெ.பொறியியல் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. போட்டிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.