தமிழ்நாடு மாநில காவல்துறை சார்பில் சைக்கிள் போட்டி

0 292
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடி ஊராட்சியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய புறவழிச் சாலையில் தமிழ்நாடு மாநில காவல்துறை சார்பில் 62 வது மண்டலத்திற்கு உட்பட்ட சைக்கிள் போட்டி நடைபெற்றது. நான்கு பிரிவு பிரிவுகளாக நடைபெறும் இப் போட்டியில் ஆண்கள் பெண்கள் என காவலர்களுக்கு இடையே மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கும், பெண்கள் பிரிவில் 30 கிலோமீட்டர் தூரத்திற்கும் டைம் ட்ரையல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் குறைந்த நேரத்தில் இலக்கை அடைபவர்கள் முறையே முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதையடுத்து ஆண்கள் பிரிவில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கும், பெண்கள் பிரிவில் 15 கிலோமீட்டர் தூரத்திற்கும் ஓபன் போட்டி நடைபெற்றது. பின்னர் 50 கிலோமீட்டர் தூரத்திற்கான ஆண்கள் பெண்கள் இருபாலன் கலந்து கொள்ளும் ஓபன் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டி 3 வது பட்டாலியன் பிரிவு கமாண்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மேலும் லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம், சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் உள்ளிட்ட லால்குடி உட்கோட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.