முசிறியில் மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது

0 262
Stalin trichy visit

முசிறி கைகாட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாநகரில் நடனத்துடன் கூடிய மதுபான பார் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் கைதை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது

போராட்டத்திற் பாரதிய ஜனதா கட்சியின் முசிறி நகர தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். திருச்சியில் நடனத்துடன் கூடிய மதுபான திறப்பதை கைவிட வேண்டும் எனவும் கண்டித்தும் கோசம் எழுப்பி ஆர்பாட்டம் செய்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் தலைமையிலான போலீசார் மறியல் செய்த இரண்டு பெண்கள் உட்பட 22 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பாஜகவினரின் திடீர் மறியல் போராட்டம் காரணமாக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.