சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் பனை விதைகள் நடப்பட்டது
திருச்சி, ஆக.16 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரதி ஜனதா கட்சியின் சார்பாக நகர தலைவர் கோல்டு கோபால் தலைமையில் சுமார் 450 வீடுகளுக்கு இலவசமாக தேசிய கொடிகள் நகர உள்ள வீடுகளுக்கு கட்சி நிர்வாகிகள் தேசியக்கொடி வழங்கினார்கள். தொடர்ந்து மணப்பாறை பேருந்து நிலையம் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும் மணப்பாறை பெரிய குளத்தில் பனை விதைகள் 250க்கு மேற்பட்ட விதைகள் நடப்பட்டுள்ளது.
இதில் மாவட்டத் துணைத் தலைவர் லலிதா அழகப்பன் மாநில மகளிர் செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் சஞ்சய் குப்ரோ மாவட்ட ஓபிசி அணி துணைத் தலைவர் பாலசுப்பிரமணி நகர பொதுச்செயலாளர் சுரேஷ் ஓபிசி அணி தலைவர் பாண்டியன் நகர துணைத் தலைவர்கள் பாலகுரு சேகர் நகர செயலாளர் லட்சுமணன் மாவட்ட செயற்குழு லட்சுமணன் வர்த்தகப் பிரிவு தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்