மண்ணச்சநல்லூர் லயன்ஸ் கிளப் சார்பில் சுதந்திர தின விழா

0 348
Stalin trichy visit

திருச்சி, ஆக.16  78 வது ஆண்டு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மண்ணச்சநல்லூர் லயன்ஸ் கிளப் சார்பில் மண்ணச்சநல்லூர் ஆண்கள் மேல்நிலை பள்ளி, காந்தி பூங்கா மற்றும் சாலையோரங்களில் 78 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
முன்னதாக மண்ணச்சநல்லூர் காந்தி பூங்காவில் உள்ள  மகாத்மா காந்தியின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் மண்ணச்சநல்லூர் லயன்ஸ் கிளப் தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் ராஜ்குமார் பூங்கவில் மரக்கன்று நட்டு வைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.
அதையொட்டி தாய் நாட்டிற்கு பாதுகாப்பாக எல்லை பகுதிகளை காக்கும் ராணு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவ படுத்தி இனிப்புகள் வழங்கினர்.
மேலும் இதையடுத்து மரக்கன்றுகளுடன் பூங்காவில் இருந்து தேசிய கொடியை பிடித்த பேரணியாக சுமார் 1 அரை கிலோமீட்டர் சென்று சாலையோரம், மண்ணச்சநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மற்ற முக்கிய வீதிகளில் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் லயன்ஸ் கிளப் பொருளாளர் முத்துச்செல்வன், முன்னாள் மூத்த தலைவர்கள், உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.