பா.ஜ.க. கட்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு
திருச்சி, பிப். 2 திருச்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மற்றும் மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன் அவர்கள், பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் புரட்சிக்கவிதாசன் இணை அமைப்பாளர்கள் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் மற்றும் ஒண்டி முத்து அவர்கள் முன்னிலையில் அலுவலக திறந்து வைத்தார்கள். நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திருமதி லீமா சிவகுமார், இணை அமைப்பாளர் திரு சந்துரு, மேற்கு தொகுதி பொறுப்பாளர் திருமதி புவனேஸ்வரி, அமைப்பாளர் திரு கௌதம் நாகராஜ் , இணை அமைப்பாளர் காளீஸ்வரன் ஸ்ரீரங்கம் சட்டமன்ற பொறுப்பாளர் திரு ஜெயகருணா, அமைப்பாளர் ராஜேஷ் குமார், இணை அமைப்பாளர் சர்வேஸ்வரன், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற பொறுப்பாளர் செல்வதுரை, அமைப்பாளர் எஸ் பி சரவணன், இணை அமைப்பாளர் சிட்டிபாபு, மாவட்ட பொதுச் செயலாளர் பொன் தண்டபாணி மற்றும் மாநில,
மாவட்ட, அணி,பிரிவு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.