திருச்சியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

0 360
Stalin trichy visit

திருச்சியில் கட்டி முடிக்கப்பட்ட மணிமண்டபங்களை திறக்க வலியுறுத்தி மத்திய பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

காங்கிரஸ் கட்சியின் ஊழலை கண்டித்தும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள, பெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர், சர். பி.டி.பன்னீர்செல்வம் ஆகியோர் மணிமண்டபங்களை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தியும், திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பார்வையாளர் புரட்சி கவிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர் ராமலிங்கம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பாஜக மகளிர் அணி உள்ளிட்ட100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.