இடைத்தேர்தலில் பா.ஜ.க வின் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: அண்ணாமலை
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கு அவருக்கு கட்சியின் உற்சாக வர வாய்ப்பு அளித்தனர் இதனை தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக கருவூருக்கு சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்
இடைத்தேர்தலில் பாஜக வின் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
நிற்க கூடிய வேட்பாளர் பண பலம் , படைபலம் ஆகியவற்றை எதிர்க்கும் வகையில் ஒரே ஒரு வேட்பாளர் நிற்க வேண்டும் , அந்த வேட்பாளரின் பின்னால் அனைவரும் நிற்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு , பாஜக வின் நிலைப்பாடு
நிற்ககூடிய ஒரு வேட்பாளரை வெற்றிபெற எல்லா வகையான அஸ்திரங்களையும் கொடுக்க வேண்டியது கூட்டணியின் கடமை
திமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்பது பலம் வாய்ந்த கட்சியாகவும் , மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்ற வேட்பாளராகவும் இருப்பது அவசியம்.
கூட்டணி தர்மம் காக்கப்பட வேண்டும்.
நம் கூட்டணியில் பெரிய கட்சி என்பது அதிமுக தான்.
திருச்செந்தூர் கோவில் 5309 மாடுகள் காணோம் 1302 கோடி கணக்கு வழக்கில் குறைகள் உள்ளது. 15 லட்சம் லட்சம் பில்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறது. இது இல்லை என்று அவர் இதுவரை கூறவில்லை. நான் கேட்கும் கேள்விக்கு ஆதாரப்பூர்வமாக பதில் இல்லை. ஒரு திருக்கோயிலின் உண்டியலில் பொதுமக்கள் செலுத்தும் காணிக்கை அந்த கோயிலின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் இது தவிர கோயில் நிர்வாகத்தில் பணி பெறக்கூடிய அதிகாரிகள் பஜ்ஜி, போண்டா, மிச்சர் போன்ற உணவு வகைகள் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தார்.