முசிறி எம்ஐடி கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா…

0 27

முசிறி எம் ஐ டி கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு எம் ஐ டி கல்வி நிறுவனங்களின் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
எம் ஐ டி கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் பிரவீன் குமார், செயலாளர் மோனிகா பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம் ஐ டி கல்வி நிறுவனங்களில் பயின்ற 500 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேசும்போது பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் சிறந்த குறிக்கோள் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் தமிழ் மொழியின் அருமை குறித்தும் பேசினார்.
மேலும் இன்று கல்வியின் தரம் சிறந்து விளங்குவதாகவும் மாணவ மாணவிகள் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
ஐஎஸ்ஆர்ஓ இயக்குனர் டாக்டர் எஸ் வி சர்மா பேசும்பொழுது பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார் துறைகளில் இருக்கும் வேலை வாய்ப்புகளை பெற எவ்வாறு முயற்சிக்க வேண்டும் என்று கூறி தன்னம்பிக்கை ஏற்படுத்தினார். மேலும் தொழில் வல்லுனராக தேவையான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் எடுத்துரைத்து மாணவ மாணவிகளுக்கும் இந்தியாவின் எதிர்காலத்திற்கும் வழிகாட்டும் விதமாக பேசினார்..
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் துறைத்தலைவர் டாக்டர் கோபிநாத்கணபதி அவர்கள் பட்டம் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்தினார்.
விழாவில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
எம் ஐ டி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கலைவாணி அனைவரையும் வரவேற்றார்.
எம் ஐ டி கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!