முசிறியில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

0 313
Stalin trichy visit

திருச்சி,டிச. 20  திருச்சி மாவட்டம்,  முசிறி அந்தரம்பட்டி ரோடு கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ச்சனா ( 31 ). இவர் தனது குடும்பத்துடன் மாடியில் வசித்து வருகிறார் இவரது மாமியார் கீழ் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அர்ச்சனா வீட்டை பூட்டிவிட்டு கீழ் வீட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் படுத்து உறங்கி உள்ளார். காலையில் எழுந்து வீட்டை பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கப் போர்டில் வைத்திருந்த பணம் பத்தாயிரம்,
ஏ டி எம் கார்டு ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது இது குறித்து அர்ச்சனா முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.