முசிறி அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

0 236
Stalin trichy visit

 

திருச்சி, டிச. 20  திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் முசிறி எம்எல்ஏ தியாகராஜன் துவக்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சி சார்பாக மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது. தொட்டியம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற மூகாமை முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமை வகித்து திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் காளியப்பன் மற்றும் பேரூராட்சித் தலைவர் சரண்யா பிரபு செயல் அலுவலர் பிரகந்தநாயகி ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.

முகாமில் வருவாய்த்துறை காவல்துறை பொதுப்பணித்துறை மின்வாரியத்துறை மாற்றுத்திறனாளிகள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது தொட்டியம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 -வார்டுகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.