தொழிலாளி மீது கொடூர தாக்குதல்
திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (54) இவர் வையம்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வம் என்பவர் வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தமிழ் செல்வத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த ஷாஜஹான் (44) என்பவருக்கும் முன் பகை இருப்பதாக கூறப்படும் நிலையில் வையம்பட்டி கடை வீதியில் ராஜேந்திரனிடம் தகராரில் ஈடுபட்ட ஷாஜஹான் பின்னர் அவரை மேல தள்ளி அடித்து உதைத்து நெஞ்சில் ஏறி நிற்கிறார். இதில் காயமடைந்த ராஜேந்திரன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பேரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஷாஜஹானை தேடி வருகின்றனர்.