கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லைப்பந்தயம்
திருச்சி, ஆக.23 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பில் மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியை துவக்கி வைத்தார்.
பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடந்த போட்டியில் 8 மற்றும் 6 கிலோ மீட்டர்கள் பந்தைய தூரமாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டுவண்டி போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 13 பெரிய மாட்டு வண்டிகளும், 24 சிறிய மாட்டு வண்டிகளும் கலந்துகொண்டன.