பணியகம் – தெய்வத்தமிழ் பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

0 243
Stalin trichy visit

வடலூர் சபையில் பன்னாட்டு மையம் அமைக்க கூடாது என வலியுறுத்தி வள்ளலார் பணியகம் மற்றும் தெய்வத்தமிழ் பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

தெய்வத்தமிழ் பேரவை வள்ளலார் பணியகம் சார்பில் தமிழக அரசு 100 கோடி மதிப்பீட்டில் பன்னாட்டு மைய கட்டிடங்களை எழுப்பி வடலூர் சத்திய ஞான சபையை சிதைக்காமல் அதற்கு வெளியே வேறு இடத்தில் அக்கட்டங்களை கட்ட வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் காதி கிராஃப்ட் அருகில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு தெய்வத்தமிழ் பேரவை மாவட்ட அமைப்பாளர் ராமராசு தலைமை தாங்கினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தை திருக்குறள் முருகானந்தம் தொடங்கி வைத்து உரையாற்றினார் மேலும் வட குரு மடாதிபதி ராஜ யோக சித்தர் பீடத்தின் குச்சனூர் கிழார் விளக்க உரை நிகழ்த்தினார். இதில் நிர்வாகிகள் கவித்துவன், ராச ரகுநாதன், இலக்குவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் அருட்பெருஞ்ஜோதி கல்வி அறக்கட்டளை மோகனசுந்தரம் அருட்பெருஞ்ஜோதி சபை பொறுப்பாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வள்ளலார் பணியகம் தெய்வத் தமிழ் பேரவை நிர்வாகிகள் உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.