பஸ் மறியல் போராட்டம் : ஒய்வு பெற்ற அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
திருச்சி, ஆக. 6 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நல சங்கம் பேரவை சார்பில் வருகிற 17-ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் பஸ் மறியல் போராட்டம் அறிவிப்பு.
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நல சங்க பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பஸ் மறியல் போராட்டம் அறிவிப்பு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தலைவர் மருதமுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
போக்குவரத்து கழகங்களில் சுமார் 95,000 ஓய்வு பெற்றவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு பல ஆண்டுகளாக தீர்வு காணாத தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் தேர்தல் பரப்புரையில் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் பிரச்சனைகளை 100 நாளில் தீர்த்துக் கொடுப்பேன் என்று முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் பணி ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளாகிய ஓய்வு கால பண பலன்களை வழங்காமல் காலம் தாழ்த்தும். போக்கை கண்டித்தும் 9 வருடங்களாக 95,000 ஓய்வு பெற்றவரில் வாழ்வாதாரமான பஞ்சப்பாடி உயர்வு வழங்காமல் வதைக்கின்ற தமிழக அரசின் எத்தனை போக்கை கண்டித்தும் உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் உதாசீனப்படுத்தும் அதிகாரிகளை கண்டித்தும் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வூதிய உயர்வுகளே வழங்காமல் ஓய்வு பெற்றவர்களை வஞ்சிக்கும் போக்கை கண்டித்தும் 2003 க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்களையும் பென்ஷன் திட்டத்தில் இணைக்க கோரியும் போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை பணி அமர்த்துவதை கண்டித்தும் போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்றவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் பலனளிக்காத நிலையில் எங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றி தராத தமிழக அரசை கண்டித்து வருகிற 17-ஆம் தேதி குடும்பத்துடன் மாநிலம் தழுவிய அளவில் பஸ் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த பேட்டியின் போது அருகில் பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன் பொருளாளர் செல்வராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.