வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

0 383
Stalin trichy visit

திருச்சி, அக்.5 திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ், பயன்பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்பட அனைத்து இன பதிவுதாராகளும் பள்ளியில் படித்து 9ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 45 வயது, மற்ற இனத்தவர்களுக்கு 40 வயது பூத்தி அடைந்திருக்கக் கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. தகுதியுடைய மனுதாரர்கள் தங்களது அசல் கல்விச் சான்று, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குகு நேரில் வந்து விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்துக் கொள்ளலாம்.
மாற்றுத் திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். அசல் கல்விச் சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறானாளிகளுக்கு வருமான உச்சவரம்பு நீக்கப்பட்டதால் வருவாய்த்துறை சான்று தேவையில்லை. ஏற்கெனவே விண்ணப்பம் பெற்றிருந்தால் வங்கி கணக்கு புத்தகம், அசல் கல்விச் சான்றிதழ்கள், வருவாய்த்துறை சான்று ஆகியவற்றுடன் நேரில் சமாப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.