கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது!

0 292
Stalin trichy visit

திருச்சி மாநகரில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதில் கடந்த ஜனவரி மாதம் பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் அருகே கஞ்சா விற்பனை செய்த நவலடியான்(வயது 46) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்து சிறையில்

அடைத்தனர். தொடர் விசாரணையில், கஞ்சா விற்பனையால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதால் சிறையில் உள்ள நவலடியானை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிந்துரையின்பேரில் மாநகர கமிஷனர் கார்த்திகேயன், சிறையில் உள்ள நவலடியானை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான நகல் சிறையில் உள்ள நவலடியானிடம் போலீசார் வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.