கார் – பைக் நேருக்கு நேர் மோதல் : 2 பேர் படுகாயம்

0 354
Stalin trichy visit

துறையூர் நாமக்கல் சாலையில் தா.பேட்டை நெடுஞ்சாலை எடை மேடை அருகில் காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இருவர் காயம்

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் நீலியாம்பட்டியை சேர்ந்தவர் கண்ணாலன்(34) . இவர் தனது மனைவி நர்மதா (30)  என்பவரை தனது பைக்கின் பின்னால் அமர வைத்து துறையூர் நாமக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார். தா.பேட்டை நெடுஞ்சாலை எடை மேடை அருகே வந்தபோது முசிறி வட்டம் என். கருப்பம்பட்டியைச் சேர்ந்த ராஜா (55) என்பவர் ஒட்டி வந்த கார் ,பைக்குடன் நேருக்கு நேர் மோதியது. இதில் கண்ணன் படுகாயம் அடைந்து துறையூர் தனியார் மருத்துவமனையிலும் ,அவரது மனைவி நர்மதா காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். சம்பவம் குறித்து நர்மதா அளித்த புகாரின் பேரில் தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.