வேன் டிரைவருக்கு கத்தி குத்து : 7 பேர் மீது வழக்கு பதிவு

0 166
Stalin trichy visit

திருச்சி செப். 8 திருச்சி புத்தூர் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் சீனிவாச பாபு (வயது30). லோடு வேன் டிரைவர். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சீனிவாசா பாபு நேற்று புத்தூர் மந்தை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் இவரை தாக்கி, கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர். காயமடைந்த சீனிவாச பாபு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து உறையூர் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த கருணா, விக்கி, கார்த்திக், விஜயன், ஹரி, சிவனேசன், மகாமுனி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.